உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வழிப்பறி செய்ய முயன்றவர் கைது

வழிப்பறி செய்ய முயன்றவர் கைது

சின்னமனூர்: நடந்து சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்ற இளைஞரை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் .சின்னமனூர் காந்திநகர் காலனியைசேர்ந்தவர் தேன்மொழி 48, இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு நடந்து சென்ற போது பின் தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் கத்தியை காட்டி அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க செயிளை தருமாறு மிரட்டியுள்ளார். செயினை பறிக்க முயற்சி செய்துள்ளார். சேலையுடன் செயினை இறுகப்பற்றிக் கொண்டு சத்தம் போட்டு ஆட்களை அழைத்துள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒடி வந்துள்ளனர். ஆட்கள் வருவதை பார்த்ததும், செயினை விட்டு, விட்டு இளைஞர் தப்பி ஒடினார். பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் உடுமலைப் பேட்டையை சேர்ந்த சத்ய நாராயணன் மகன் ராஜேஷ்கிருஷ்ணன் 28 என்பது தெரிய வந்துள்ளது.எஸ்.ஐ. சுல்தான் பாட்சா வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை