| ADDED : ஆக 13, 2024 12:35 AM
போடி : விவசாயிகள் நலன் காக்காகவும், மழை வேண்டியும் போடி ஐயப்பன் கோயிலில் ஐயப்பனுக்கு நெற்கதிர் அலங்காரத்தில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது.மழை பெய்யவும், விவசாய பணிகள் மேற்கொள்ளவும், விவசாயிகள் நலன் காக்கும் வகையில் போடி ஐயப்ப பக்த சபை சார்பில் ஐயப்பனுக்கு நெற்கதிர் அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பாயாசத்துடன் கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை போடி ஐயப்ப பக்த சபை குருநாதர் மகாலிங்கம் தலைமையில் செயலாளர் சங்கிலிகாளை, பொருளாளர் பாலு உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர். சுவாமி அலங்காரத்தினை அர்ச்சகர் கமலக்கண்ணன் செய்திருந்தார்.