உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுந்தரவேலவர் கோயிலில் பாலாலய விழா

சுந்தரவேலவர் கோயிலில் பாலாலய விழா

கூடலுார்: கூடலுார் கூடல் சுந்தர வேலவர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் 2025ல் நடைபெறுவதை முன்னிட்டு கோயில் விமானங்கள், ராஜகோபுரங்களை திருப்பணிகள் செய்வதற்கான பாலாலய பூஜைகள் நடந்தது.சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதல் மற்றும் இரண்டாம் கால யாக பூஜைகள் நடந்த பின் பிரசன்ன படங்களுக்கு பாலாலய அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. யாகசாலை பூஜை நேரங்களில் வேதம் மற்றும் திருமுறை பாராயணங்கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்