உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வரத்து குறைவால் வாழைப்பழம் விலை உச்சம்

வரத்து குறைவால் வாழைப்பழம் விலை உச்சம்

கம்பம்: வரத்து குறைவால் வாழைப் பழங்களின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம், போடி, பெரியகுளம் ஆண்டிபட்டி என அனைத்து பகுதிகளிலும் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது வாழைக்கு தொடர்ந்து நல்ல விலை கிடைத்து வருவதால் மாவட்டத்தில் 22 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடியாகிறது. செவ்வாழை , நேந்திரன், நாழிப் பூவன், ஜி 9 உள்ளிட்ட ரகங்கள் பிரதானமாகும். செவ்வாழை சாகுபடி காலம் 20 மாதங்கள் என்றாலும் நல்ல விலை கிடைக்கும். கிலோ ரூ.40 முதல் 50 வரை விலை கிடைத்து வந்தது.கடந்த சில வாரங்களாக திடீரென கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விலை உயர்ந்துள்ளது. பழங்களின் தேவையும் அதிகமாக உள்ளது. ஆனால் வரத்து மிக குறைவாக உள்ளது. நாழிப் பூவன் விலை கிலோவிற்கு ரூ.100 க்கு மேல் சென்று விட்டது. ஜி 9 விலையும் கிலோ ரூ.25 வரை உள்ளது.இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளித்த போதும், தோட்டங்களில் பழம் இல்லாததால் பலனில்லை என்கின்றனர் விவசாயிகள். நேந்திரன் பழ சாகுபடி பரப்பு குறைந்து விட்டது.தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், இந்தியாவில் வாழை உற்பத்தியில் ஆந்திராவும், தமிழகமும் முக்கிய பங்கற்றுகின்றன. கம்பம் பள்ளத்துக்கில் இப்போது தான் நடவு செய்துள்ளனர். ஆந்திராவில் வறட்சி மற்றும் கன மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வரத்து குறைவாக உள்ளது . வரத்து வரும் வரை இந்த விலை உயர்வு நீடிக்கும் என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்