உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கூடைப்பந்து போட்டி மழையால் டிரா

கூடைப்பந்து போட்டி மழையால் டிரா

தேவதானப்பட்டி: கல்வி சர்வதேச பொதுப் பள்ளியில் நடந்த மாநில கூடைப்பந்து போட்டி மழையால் இறுதிப்போட்டி 'டிராவானது'.தேவதானப்பட்டி கல்வி சர்வதேச பொதுப் பள்ளி நடத்திய முதலாம் ஆண்டு கல்வி கோப்பைக்கான மாநில அளவில் 17 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி மூன்று நாட்கள் நடந்தது. இந்திய கூடைப்பந்தாட்ட வீரர் ஜீவானந்தம், மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் சிதம்பரசூரியவேலு, மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட பயிற்சியாளர் சுப்புராஜ், கல்வி சர்வதேச பொதுப்பள்ளி இயக்குனர் செந்தில் ராஜ்குமார், பள்ளி முதல்வர் வெங்கடேஸ்வரி போட்டிகளை துவக்கி வைத்தனர்.சென்னை வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை பெர்க்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மதுரை செயின்ட் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி,தேவதானப்பட்டி கல்வி சர்வதேச பொதுப் பள்ளி, திண்டுக்கல் எம்.எஸ்.பி., மேல்நிலைப்பள்ளி, வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம் வி.நி.அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட 20 க்கும் மேற்பட்ட அணிகள் மோதியது.மூன்றாம் மற்றும் நான்காம் இடத்திற்கான போட்டியில் செயின்ட் தாமஸ் அணியும், சி.எஸ்.எம்.ஏ., அணியும் மோதியது. இதில் செயின்ட் தாமஸ் அணி 59:47 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடம் பிடித்தது. முதல் இடத்தை பிடிக்கஎம்.எஸ்.பி., அணியும், கல்வி சர்வதேச பொதுப் பள்ளி அணியும் மோதியது.இரு அணி வீரர்களும் வெற்றியை ருசிக்க ஆயத்தமானர். மழை பெய்ததால் போட்டி 'டிரா' ஆனது. இரு அணி வீரர்களுக்கு வெற்றியில் சமபங்குஎன நடுவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி