உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

ஆண்டிபட்டி: டி.பொம்மிநாயக்கன்பட்டி பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பின் நடந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. பூர்ணாஹூதி நிகழ்ச்சியை தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடாகி, புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரால் கோயில் கலசத்திற்கு அபிஷேகம் செய்தனர். மூலவர் பகவதி அம்மனுக்கு விபூதி, மஞ்சள், குங்குமம், பால், தயிர், பன்னீர், தேன் உட்பட 21 வகையான அபிஷேகம், மஹா தீபாராதனைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.சக்கம்பட்டி அழகர்சாமி கோயிலில் இரு நாட்கள் நடந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் முதல் நாளில் கணபதி பூஜை, பூமி பூஜை, பாலிகை பூஜை, முதற்கால பூர்ணாஹூதி நிகழ்ச்சிகளுக்கு பின் மூலவர் அழகர்சாமி, பரிவார தெய்வங்கள் நாகம்மாள், அங்காள ஈஸ்வரி, வீர சின்னம்மாள், கருப்பசாமி சிலைகளுக்கு பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. 2ம் நாளில் கோ பூஜை, 2ம் கால யாக சால பூஜைகள், மஹாபூர்ணாஹூதி உட்பட பல்வேறு பூஜைகளுக்கு பின் கடம் புறப்பாடாகி மூலவர், பரிவாரங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகம் அதனை தொடர்ந்து நடந்த ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை