உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கிராமப்புற மாணவர்கள் மேம்பாட்டிற்கு உதவும் பாரத் நிகேதன் பொறியியல் கல்லுாரி

கிராமப்புற மாணவர்கள் மேம்பாட்டிற்கு உதவும் பாரத் நிகேதன் பொறியியல் கல்லுாரி

பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி, ஆண்டிபட்டி பகுதியில் கிராமப்புற மாணவ, மாணவிகளின் மேம்பாட்டிற்காக 1998ம் ஆண்டு ரமணி அய்யர் அவர்களால் 'என்.ஆர்.டி., டிரஸ்ட்' மூலம் துவக்கப்பட்டது.கல்லூரி நிர்வாக தலைவர் மோகன் அவர்களால் பாலிடெக்னிக் கல்லூரி துவக்கப்பட்டு, நிர்வாக குழு உறுப்பினர்கள் பிரசன்னவெங்கடேசன், ரேணுகா மோகன், சுதா மீனாட்சி ஆகியோரால் நிர்வகிக்கப்படுகிறது.பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் CIVIL, C.S., E.C.E., EEE.,MECH, IT., A.I, மற்றும் D.S., Agri ஆகிய இளநிலை பாடப்பிரிவுகளும், M.E., S.E.,I.S.E., C.S., M.B.A., M.C.A.,ஆகிய முதுநிலை பாடப்பிரிவுகளும் பயிற்றுவிக்கப்படுகிறது.மேலும் மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் 'டிடியு ஜிகேஒய்' திட்டத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வேலை வாய்ப்பு வசதி செய்து கொடுக்ப்படுகிறது.தொடர்ந்து மண்டல, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பல்கலை அளவில் வெற்றி பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளது இக்கல்லூரி.தேனி மாவட்டத்தின் முதல் பொறியியல் கல்லூரி என்ற பெருமை பெற்று வெள்ளி விழா கண்டு, பவள விழா நோக்கி வெற்றி நடை போட்டு வருகிறது. மேலும் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு கணித தேர்வு நடத்தி அதில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் கட்டணச்சலுகை வழங்கப்படுகிறது. மேலும் 4 மாவட்டங்களுக்கும் பஸ் வசதி, கல்லூரி வளாகத்திற்குள்ளாகவே இரு பாலருக்கும் தனித்தனி விடுதி வசதியும் உள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி கல்வியில் மேம்படுத்தி வேலை வாய்ப்புகள் பெற்று தரப்படுகிறது. கல்லூரியின் சிறப்பம்சமாக பசுமை வளாகம், மேம்படுத்தப்பட்ட ஆய்வக வசதி, திறமையும் அனுபவமும் வாய்ந்த பேராசிரியர்கள், சிறப்பு வகுப்புகள், திறன் மேம்பாட்டு பயிற்சி மையம், ஆராய்ச்சி மையம், உயர்தர உணவகம், உடற்பயிற்சி மையம், நவீன நூலகம், உள் மற்றும் வெளி அரங்கு, விளையாட்டு வசதி அதிவேக இணைய வசதி, ஆகியவை வழங்கப்படுகிறது. பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் அருள்குமார் அவர்களின் வழிகாட்டுதலிலும், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயக்குமார் அவர்களின் வழிகாட்டுதல் படியும் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி