உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி நகராட்சி கமிஷனர் மீது பா.ஜ.,வினர் போலீசில் புகார்

தேனி நகராட்சி கமிஷனர் மீது பா.ஜ.,வினர் போலீசில் புகார்

தேனி: தேனி பாரஸ்ட் ரோடு 2வது தெரு ஜெயமுருகன் 35. பா.ஜ, தேனி நகர பொதுச் செயலாளராக உள்ளார். இவர் தேனி இன்ஸ்பெக்டர் உதயகுமாரிடம் வழங்கிய புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நேற்று சொந்த பணி நிமித்தம் புதிய கர்னல் ஜான் பென்னிகுவிக பஸ் ஸ்டாண்ட் சென்று கொண்டிருந்தேன்.கே.ஆர்.ஆர்., நகர் இறக்கத்தில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டர் அருகில் நகராட்சி குப்பை அகற்றும் வாகனம்போக்குவரத்திற்கும், பொது மக்களுக்குபோக்குவரத்து இடையூறாக நின்றிருந்தது. இதில் டூவீலர் வந்த இளைஞர் குப்பை வாகனத்தின் பககவாட்டில் மோதி விபத்திற்குள்ளாகி கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கு வந்த கமிஷனர், இளைஞருக்கு முதலுதவி செயயாமல், வாகனத்தின் கண்ணாடி சீரமைத்துவிட்டு எடுத்துச் செல் என ஒருமையில் பேசி, முதலுதவி அளிக்க வலியுறுத்திய என்னை நீ யார் எனக் கேட்டு கடிந்து கொண்டார்.எனவே, இளைஞருக்கு முதலுதவி அளிக்காத கமிஷனரின் பொறுப்பற்ற செயலலை கண்டிக்கிறோம். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை