உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம் டி. அணைக்கரைப்பட்டியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. டி.சுப்புலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட இப்பகுதிக்கு ஆண்டிபட்டி - சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் உள்ளது.குடிநீர் மெயின் குழாய் இக்கிராமம் வழியாக புள்ளிமான்கோம்பை ஊராட்சிக்குட்பட்ட சில கிராமங்களுக்கு செல்கிறது. தற்போது உடைந்துள்ள குழாய் உள்ளூர் வினியோகத்திற்கானதா அல்லது பக்கத்து கிராமங்களுக்குச் செல்லும் குடிநீர் குழாயா என்பது தெரியவில்லை. சேதம் அடைந்த குழாயை சரி செய்ய ஊராட்சி நிர்வாகம், குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி