உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும்

பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும்

கூடலுார் : கூடலுார் நகராட்சியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என பா.ஜ., சார்பில் நகராட்சி கமிஷனிடம் புகார் மனு வழங்கப்பட்டது.கூடலுார் நகராட்சியில் திருமணம், காதணி விழா உள்ளிட்ட வீட்டு விசேஷங்களிலும், துக்க நிகழ்ச்சிகளிலும் பட்டாசு வெடிப்பது அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் வகையில் மக்களுக்கு பல்வேறு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதய நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பண்டிகை நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என பா.ஜ., சார்பில் நகராட்சி கமிஷனர் காஞ்சனாவிடம் புகார் மனு வழங்கினர்.பா.ஜ.,நகர தலைவர் முருகேசன், பொதுச்செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர் குணா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்