உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பினிஷிங் பாய்ன்ட் டில் முகாமிட்ட படையப்பா

பினிஷிங் பாய்ன்ட் டில் முகாமிட்ட படையப்பா

மூணாறு : படையப்பா யானை தனது 'பினிஷிங் பாய்ன்ட்' பகுதியான பாம்பன்மலையில் முகாமிட்டுள்ளது.மூணாறு பகுதியில் வலம் வரும் காட்டு யானைகளில் வயது முதிர்ந்த படையப்பா ஆண் காட்டு யானை மிகவும் பிரபலம். மூணாறு - உடுமலைபேட்டை ரோட்டில் அடிக்கடி வலம் வரும் படையப்பா தனது ' பினிஷிங் பாய்ண்ட்' பகுதியான மறையூர் அருகே பாம்பன்மலை பகுதி வரை செல்வதுண்டு. தற்போது நான்கு மாதம் இடைவெளிக்கு பிறகு பாம்பன்மலை பகுதியில் முகாமிட்டுள்ளது.அப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை பள்ளி மாணவ, மாணவிகள் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிரே படையப்பா வந்தது.தொழிலாளர்கள் படையப்பாவை விரட்டியதால் மாணவ, மாணவிகள் தப்பினர்.பாம்பன்மலை பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்கு அருகே கடந்த ஒரு வாரமாக படையப்பா நடமாடுவதால் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை