உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆட்டோவை அடமானம் வைத்தவர் மீது வழக்கு

ஆட்டோவை அடமானம் வைத்தவர் மீது வழக்கு

ஆண்டிபட்டி: தேனி பங்களாமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜ் 45. ஆட்டோ பைனான்ஸ் நடத்தி வருகிறார். இவரிடம் அரப்படித்தேவன்பட்டியை சேர்ந்த நல்லமுத்துக்காமன் ஆட்டோவை நாள் ஒன்றுக்கு ரூ.200 வீதம் கொடுத்து ஓட்டி வந்துள்ளார். நல்லமுத்துகாமனுக்கும் க.விலக்கு முத்தனம்பட்டியை சேர்ந்த வினோத்குமாருக்கும் 24, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது. இப்பிரச்னையில் வினோத்குமார் நல்லமுத்துகாமன் ஓட்டி வந்த ஆட்டோவை அடமானம் வைத்தார். தனது ஆட்டோவை ஏன் அடகு வைத்தாய் என்று கேட்டதால் வினோத்குமார், பாண்டியராஜை தரக்குறைவாக பேசி பிரச்னை செய்துள்ளார். பாண்டியராஜ் புகாரில் க.விலக்கு போலீசார் வினோத்குமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை