மேலும் செய்திகள்
வாலிபருக்கு கத்திவெட்டு 15 பேருக்கு போலீஸ் வலை
13-Aug-2024
போடி : போடி அருகே கரட்டுப்பட்டி கட்டபொம்மன் மேற்கு தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் 40. இவரது சித்தப்பா மகன் வேல்முருகன் 41. இருவருக்கும் மங்களக் கோம்பையில் உள்ள தோட்டத்தில் பாதை பிரச்னை இருந்தது. இந்நிலையில் பிரபாகரன் தோட்டத்திலிருந்த போது, வேல்முருகன் தகாத வார்த்தையால் பேசி, அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். அதை பிரபாகரன் தடுத்து நிறுத்தினார். இதில் பிரபாகரனுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது.இது போல பிரபாகரனும் அரிவாளால் வேல்முருகனை வெட்ட முயன்றார்.இதில் வேல்முருகனுக்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பு புகாரில் போலீசார் வேல்முருகனை கைது செய்தும், பிரபாகரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
13-Aug-2024