உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாணவர்களை தாக்கியதாக காவலர் மீது வழக்கு

மாணவர்களை தாக்கியதாக காவலர் மீது வழக்கு

மூணாறு : அரசு மாதிரி உண்டு, உறைவிட பள்ளியில் மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த மாணவர்களை தாக்கியதாக காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.மூணாறில் காலனி பகுதியில் உள்ள அரசு மாதிரி உண்டு, உறைவிட பள்ளியில் மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் உள்பட 260 பேர் விடுதியில் தங்கி ஐந்து முதல் பிளஸ் 2 வரை படித்து வருகின்றனர். அங்கு அடிமாலியைச் சேர்ந்த அப்துல்சதார் காவலராக உள்ளார்.விடுமுறை நாளில் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் சிலர் மது அருந்தி விட்டு ரகளை செய்ததாகவும், அது தொடர்பாக மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்களை அப்துல்சதார் கம்பால் அடித்ததாக புகார் எழுந்தது. அவர் மீது மூணாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ