உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மனைவி, மாமனாரை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்கு

மனைவி, மாமனாரை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்கு

தேனி : தேனி அருகே மனைவி அம்பிகாவதி 27, மாமனார் முருகன் 50, ஆகியோரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த ஊட்டி போலீஸ்காரர் வெங்கடேஷ்குமார் 30, இவரது தந்தை வரதராஜ் 48, மீது க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.தேனி மாவட்டம் தேக்கம்பட்டி வரதராஜ் மகன் வெங்கடேஷ்குமார். இவர் நீலகிரி மாவட்டம் ஊட்டி புது மந்து போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக பணிபுரிகிறார். இவருக்கும் ஆண்டிப்பட்டி துரைச்சாமிபுரம் முருகன் மகள் அம்பிகாவதிக்கும் 2020ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் வெங்கடேஷ்குமாருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அடித்து துன்புருத்துவதாகவும், கடந்தவாரம் வெங்கடேஷ்குமார் லத்தியில் தாக்கியதில் அம்பிகாவதி காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரை முருகன் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். முருகன் மருத்துவமனை நுழைவாயில் அருகே உறவினர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அங்கு வந்த வரதராஜ், வெங்கடேஷ்குமார் இணைந்து முருகனை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். முருகன் புகாரில் போலீஸ்காரர் வெங்கடேஷ்குமார், அவரது தந்தை வரதராஜ் மீது க.விலக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை