உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சாத்தாவுராயன் கோயில் திருவிழா துவக்கம்

சாத்தாவுராயன் கோயில் திருவிழா துவக்கம்

போடி: போடியில் 24 மனை தெலுங்குபட்டி செட்டி உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட சாத்தவுராயன், செல்வவிநயாகர் கோயில் திருவிழா இன்று முதல் மூன்று நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி இன்று மதியம் பெரிய ஆற்றில் இருந்து சாமி பெட்டி கொண்டு வருதல், இரவு செல்வ விநாயகர் கோயிலில் இருந்து சாத்தாவுராயன் கோயில் வரை மாவிளக்கு எடுத்து வருதல் நடக்கிறது. நாளை காலை பொங்கல் வைத்தல், மதியம் பெரிய ஆற்றில் இருந்து காவடி, பால்குடம் எடுத்து வருதல் நடக்க உள்ளது. மறுநாள் மே 26 காலை விளையாட்டு போட்டிகள், இரவு முளைப்பயிரை கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு சென்று பெரிய ஆற்றில் கரைக்கப்படுகின்றன. ஏற்பாடுகளை உறவின்முறை நிர்வாகிகள், திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை