முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா..
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடந்தது. தி.மு.க., ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற தி.மு.க.,வினர் பஸ் ஸ்டாண்ட் முன்பு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கொடியேற்றினர். கொண்டமநாயக்கன்பட்டி, சக்கம்பட்டி பகுதிகளில் தி.மு.க.,வினர் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், நகர் செயலாளர் சரவணன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சேதுராஜா மற்றும் தி.மு.க., ஒன்றிய நகர நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.