உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லுாரி மாணவர்கள் அமைதி ஊர்வலம்

கல்லுாரி மாணவர்கள் அமைதி ஊர்வலம்

உத்தமபாளையம், : உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியின் நிறுவனர் நினைவுநாள், அமைதி ஊர்வலம் கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்டது. கருத்தராவுத்தர் கல்லூரி 1956 ல் கிராமப்புற மாணவர்களுக்காக துவங்கப்பட்டது. அவரது 66 வது நினைவு தின ஊர்வலம் கல்லூரி வளாகத்தில் இருந்து துவங்கியது. கல்லூரி தாளாளர் எம்.தர்வேஷ் முகைதீன் துவக்கி வைத்தார். ஆட்சி மன்ற குழு தலைவர் முகமது மீரான், முதல்வர் எச்.முகமது மீரான் மற்றும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். திரளாக மாணவர்கள் பங்கேற்ற அமைதி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது - பின்னர் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை