உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இன்ஜி., கல்லுாரிக்கு பாராட்டு சான்றிதழ்

இன்ஜி., கல்லுாரிக்கு பாராட்டு சான்றிதழ்

தேனி : மாநில திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் 'நான் முதல்வன்' மூன்றாம் ஆண்டு கருத்தரங்கம் மதுரையில் நடந்தது. இதில் பல்வேறு கல்லுாரி தலைவர்கள், முதல்வர்கள், வேலைவாய்ப்பு அலுவலர்கள் பங்கேற்றனர். இதில் தேனி மாவட்ட அளவில் அதிக மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தந்ததற்காக தேனி கம்மவார் பொறியியல் கல்லுாரிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. சான்றிதழை டி.என்.எஸ்.டி.சி., இயக்குனர் இன்னசென்ட் திவ்யா, மதுரை கலெக்டர் சங்கீதா வழங்கினர். கல்லுாரி வேலைவாய்ப்பு அலுவலர் தீர்க்கதரிசனன் பெற்றுக்கொண்டார். வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கியதற்காக கல்லுாரியை மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர், அண்ணாயுனிவர்சிட்டி மதுரை மண்டல டீன் பாராட்டினர். மேலும் தேனி கம்மவார் பொறியியல் கல்லுாரி முதல்வர் சீனிவாசராகவன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ராதாகிருஷ்ணன், பேராசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி