உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தி.மு.க., கவுன்சிலர் மீது புகார்

தி.மு.க., கவுன்சிலர் மீது புகார்

தேனி: தேனி மிரண்டா லைன் ஐயப்பன் 63, பலசரக்கு கடை வைத்துள்ளார். இவர் தேனி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில், தேனி அல்லிநகரம் நகராட்சி 21வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் கிருஷ்ணகுமாரி. இவருக்கு அரசு அலுவலர்கள், அரசியல் கட்சியினரை தெரியும் என கூறி எனது மகன் பிரசன்ன வெங்கடேசுக்கு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அரசு வேலைவாங்கி தருவதாக கூறினார். இதனை நம்பி ஓராண்டிற்கு முன் ரூ.ஒருலட்சம் வழங்கினேன். பணி ஆணை பெற்றுக்கொண்டு மீதி பணத்தை கொடுக்க கூறினார். பணி ஆணை வரவில்லை என கூறியவர், தற்போது முரணாக பேசுகிறார். அவரிடமிருந்து பணத்தை மீட்டு தர எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை