மேலும் செய்திகள்
வறட்சியால் இடம் பெயரும் விலங்குகள்
27-Feb-2025
கம்பம் : கம்பம் மேற்கு வனச்சரக பகுதியில் மான்கள், காட்டுப் பன்றிகள் வேட்டை அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தேனி வனக்கோட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, ரோட்டிற்கு மேற்கு பக்கம் உள்ள பகுதிகள் காப்பு காடுகளாகவும், கிழக்கு பக்கம் உள்ள காடுகள் புலிகள் காப்பகமாகவும் மாற்றப்பட்டது. புலிகள் காப்பகமாக மாறிய பின், வனத்துறையினரின் கெடுபிடி காரணமாக வேட்டைகள் குறைந்தது. வன உயிரினங்கள் குறிப்பாக மான்கள், காட்டு பன்றிகள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. புலிகள் காப்பக பகுதிகள் மட்டுமல்லாமல், மேற்கு வனப்பகுதிகளிலும் மான்கள், காட்டு பன்றிகள் எண்ணிக்கை அதிகரித்தது. இதில் காப்பக பகுதியில் ரோந்து மற்றும் கண்காணிப்பு அதிகமாக இருப்பதால் அங்கு வேட்டைகள் இல்லை. ஆனால் மேற்கு பகுதியில் குறிப்பாக குமுளியில் ஆரம்பித்து கம்பமெட்டு வரை வன உயிரினங்கள் மான்கள்,காட்டுப் பன்றிகள் வேட்டையாடப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் கேரளாவை சேர்ந்தவர்களும் இதில் ஈடுபடுகின்றனர். வனச்சரக அலுவலகத்தில் அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் இல்லை. மாவட்ட வன அலுவலர் மேற்கு வனப்பகுதிகளில் திடீர் ஆய்வு நடத்தி ரோந்து பணியை தீவிரப்படுத்திட வேண்டும். அப்போது தான் வேட்டைகளை கட்டுப்படுத்த முடியும் என வன ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
27-Feb-2025