உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு

பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு

தேனி: தேனி முத்துத்தேவன்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் பள்ளி அளவில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. முதல் மூன்று இடங்களை சக்தி நிவாஸ், சரிகாஸ்ரீ, தஸ்னீம் பாத்திமா பெற்றனர். இம்மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடந்தது. உறவின்முறை தலைவர் ராஜமோகன் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். விழாவில் உறவின்முறை துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், பள்ளிச் செயலாளர் பாலசரவணக்குமார், இணைச்செயலாளர்கள் வன்னியராஜன், அருண்குமார், பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி பங்கேற்றனர். மாணவர்கள் 23 பேர் பல்வேறு பாடங்களில் 100 மதிப்பெண் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை