உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரேஷன் கடைகளுக்கு கியூ.ஆர்., கோடு வழங்கும் பணி முடக்கம் சில்லரை பிரச்னையால் தொடரும் வாக்குவாதம்

ரேஷன் கடைகளுக்கு கியூ.ஆர்., கோடு வழங்கும் பணி முடக்கம் சில்லரை பிரச்னையால் தொடரும் வாக்குவாதம்

தேனி, : மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு கியூ.ஆர்., கோடு வழங்கும் திடட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கடைகளில் சில்லரை பிரச்சனை தொடர்கிறது.தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கியூ.ஆர்., கோடு மூலம் பணம் செலுத்தும் நடைமுறை மே 2023ல் தொடங்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் 77 கூட்டுறவு சங்கங்களின் கீழ் 403 முழு நேர கடைகள், 123 பகுதி நேர கடைகள் என மொத்தம் 526 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இதில் முதற்கட்டமாக கடந்தாண்டு இறுதியில் 6 கடைகளில் மட்டும் கியூ.ஆர். கோடு மூலம் பணம் செலுத்தும் நடைமுறை பயன்பாட்டிற்கு வந்தது. இவ்வசதி மூலம் கடைகளில் சில்லரை பிரச்னை தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.ஆனால், ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும் மாவட்டத்தில் உள்ள மற்ற கடைகளில் இந்த வசதி கொண்டு வரவில்லை. இதனால் பல இடங்களில் சில்லரைக்காக பொதுமக்கள், ரேஷன் கடை பணியார்கள் இடையே வாக்குவாதம் தொடர்கிறது. கூட்டுறவுத்துறை சார்பில் மதுரை மத்திய வங்கி, தனியார் நிறுவனத்துடன் இணைந்து துவக்கப்பட்ட இப்பணி முடங்கி உள்ளது. ரேஷன் கடைகளில் சில்லரை பிரச்னைக்கு தீர்வு காண கூட்டுறவுத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி