உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முன்னாள் ராணுவ வீரருக்கு வெட்டு

முன்னாள் ராணுவ வீரருக்கு வெட்டு

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி தெற்கு காலனியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் காமாட்சி 65.இவரது மகன் ரமேஷிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமார் மனைவி சுவேதா என்பவருக்கும் தொடர்பு இருந்துள்ளது. இதனால் இரு குடும்பத்தினர் இடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் காமாட்சி பால் வாங்க சென்ற போது ராம்குமார் அரிவாளால் காமாட்சியை வெட்டினார். ராம்குமார் தாயார் அக்கம்மா கையால் காமாட்சியை அடித்துள்ளார். தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல் மணிகண்டன் விசாரணை செய்து வருகிறார்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்