உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கருவூல அலுவலருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

கருவூல அலுவலருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

தேனி : தேனி மாவட்ட கருவூல அலுவலருக்கு எதிராக போராட்டம் செய்ய உள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜெகதீசன், மாவட்ட செயலாளர் தாமோதரன் கூறியதாவது, கருவூலத்துறை சார்பில் கடந்த மாதம் ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., தொடர்பாக பயிற்சி வகுப்பு நடந்துள்ளது. இந்த பயிற்சி பற்றி ஊரக வளர்ச்சித்துறையினருக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்கவில்லை. ஆனால் தற்போது பயிற்சியில் பங்கேற்காதது பற்றி விளக்கம் கேட்டு மாவட்ட கருவூலத்துறை அலுவலர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். துறை சார்ந்த அதிகாரிகள் தான் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஆனால் கருவூலர் விளக்கம் கேட்டுள்ளார். இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவும் சங்கத்தின் சார்பில் கருத்து கேட்க உள்ளோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி