தேனி:கடந்த முறை வென்ற ஒரே தொகுதியான தேனியை, அ.தி.மு.க., இந்த முறை இழந்தது. அக்கட்சி வேட்பாளர் நாராயணசாமி டிபாசிட் இழந்தார்.தேனியில் தி.மு.க., சார்பில் தங்கதமிழ்ச்செல்வன், பா.ஜ., கூட்டணியில் அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், அ.தி.மு.க., சார்பில் நாராயணசாமி, நாம் தமிழர் கட்சியில் மதன் மற்றும் சுயேச்சைகள் உட்பட 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தொகுதியில் 11,43,159 ஓட்டுகள் பதிவாகின. நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் தங்க தமிழ்ச்செல்வன் 5,71,493 ஓட்டுகள் பெற்றார். தினகரன் 2,92,668 ஓட்டுகள் பெற்றார். தி.மு.க., வேட்பாளர் 2,78,825 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க., வேட்பாளர் 1,55,587 ஓட்டுகள், நா.த.க., வேட்பாளர் மதன் 77,834 ஓட்டுகள், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஜீவா 2,222 ஓட்டுகள் பெற்றனர். இதனால் அ.தி.மு.க, வேட்பாளர் உட்பட 23 பேர் டிபாசிட் இழந்தனர்.கடந்த தேர்தலில் தேனியில் அ.தி.மு.க., வேட்பாளர் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அப்போது பா.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., வென்ற ஒரே தொகுதி இது. இந்த முறை அங்கு டிபாசிட் இழந்துள்ளது. திருநெல்வேலி
திருநெல்வேலியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனை விட ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 620 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க., வேட்பாளர் ஜான்சி ராணி டிபாசிட் இழந்தார்.திருநெல்வேலி தொகுதி வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விபரம்:பதிவான ஓட்டுகள்: 10,69,236, ஓட்டு வித்தியாசம்: 1,65,620, ராபர்ட் புரூஸ் (காங்): 5,02,296, நயினார் நாகேந்திரன் (பா.ஜ.,): 3,36,676, ஜான்சிராணி (அ.தி.மு.க.,) 89,601, சத்யா (நாம் தமிழர்): 87,686, பொட்டல் சுந்தர முனீஸ்வரன் (சுயே): 19,852.பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனைத் தவிர அ.தி.மு.க., நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் டிபாசிட் இழந்தனர்.கடந்த தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் ஞான திரவியம் மொத்தம் 5 லட்சத்து 22 ஆயிரத்து 993 ஓட்டுகள் பெற்றிருந்தார். இந்த முறை ராபர்ட் குரூஸ் 5 லட்சத்து 2,296 ஓட்டுகள் பெற்றார். கடந்த தேர்தலை விட 20 ஆயிரத்து 697 ஓட்டுகள் குறைவு. வித்தியாசத்திலும் அதே போல 20 ஆயிரத்து 106 ஓட்டுகள் குறைவாக பெற்றுள்ளார்.