உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீரபாண்டி திருவிழாவிற்கு பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பது எப்போது அவதிப்படும் பக்தர்கள்

வீரபாண்டி திருவிழாவிற்கு பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பது எப்போது அவதிப்படும் பக்தர்கள்

கூடலுார் : முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வீரபாண்டி திருவிழாவிற்காக இதுவரை தண்ணீர் திறக்காததால் பக்தர்கள் அவதிப்படுவது தொடர்கிறது. வீரபாண்டி திருவிழா மே 7ல் துவங்கி 14ல் முடிவடைகிறது. விழா துவங்குவதற்கு முன்பே பக்தர்கள் அதிகமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். விழா துவங்கியதும் பல்வேறு ஊர்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முல்லைப் பெரியாற்றில் குளித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.வழக்கமாக ஆண்டுதோறும் 3 தினங்களுக்கு முன்பே அணையில் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் நாளை விழா துவங்க உள்ள நிலையில் இதுவரை தண்ணீர் திறக்காததால் ஆற்றில் நீர்வரத்தின்றி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். தற்போது அணையில் இருந்து குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதில் 20 கன அடி மதுரை குடிநீர் திட்ட குழாயில் சோதனை ஓட்டத்திற்கு திறந்து விடப்படுகிறது. மீதமுள்ள 80 கன அடி நீர் பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு பயன்படுத்தியது போக வீரபாண்டி வரை செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அணையில் இருந்து மேலும் கூடுதலாக தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே பக்தர்கள் சிரமமின்றி நேர்த்திக்கடன்களை செலுத்த முடியும். கலெக்டர் பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட வேண்டும். கோயில் நிர்வாகவும் முறைப்படி கோரிக்கை கடிதத்தை பொதுப்பணித்துறை அனுப்பி, தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி