உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ‛டெக்கரேசன் தொழிலாளி மண்டப மேலாளர் இடையே தகராறு

‛டெக்கரேசன் தொழிலாளி மண்டப மேலாளர் இடையே தகராறு

தேனி : கம்பத்தில் 'டெக்கரேசன்' தொழிலாளிக்கும், திருமண மண்டப மேலாளருக்கும் ஏற்பட்ட தகராறில் இருவர் மீது போலீசார் வழக்கு பதித்து விசாரிக்கின்றனர்.கம்பம் மந்தையம்மன் கோயில் தெரு பிரபு 40. டெக்கரேசன் தொழில் செய்து வருகிறார். கம்பம் உழவர் சந்தை எதிரில் உள்ள திருமண மண்டபத்தில் டெக்கரேசன் செய்தார். அதனை அவிழ்க்க ஜூன் 10ல் மாலை 6:45 மணிக்கு சென்றார். அப்போது திருமண மண்டபம் மூடியிருந்தது. அதை திறக்கக்கூறிய பிரபுவிற்கும் மண்டப மேலாளர் தாத்துராஜ் 47,க்கும் பிரச்னை ஏற்பட்டது. பின் கேட்டை திறந்த மேலாளர், பேப்பர் வெயிட் ஆக பயன்படுத்தும் பெரிய கல்லால் பிரபுவை தாக்கினார். காதில் ரத்தக்காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து கொண்டிருந்த பிரபுவின் 10 வயது மகளையும் கழுத்தை பிடித்து தள்ளி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பிரபு புகாரில் கம்பம் தெற்கு போலீஸ் எஸ்.ஐ., கோதண்டராமன் மண்டப மேலாளர் தாத்துராஜ் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார். மேலாளர் தாத்துராஜ்,தன்னை பிரபு தாக்கியதில் காயமடைந்ததாக கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ