உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளி வாகனங்களுக்கு இடையூறு -மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம்

பள்ளி வாகனங்களுக்கு இடையூறு -மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம்

கூடலுார் : கூடலுார் நெடுஞ்சாலையில் காய்கறி வாகனங்கள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்படுவதால் பள்ளி வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.கூடலுார் நகர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை சமீபத்தில் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டது. கேரள எல்லைப் பகுதியில் இருப்பதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் நகர்ப் பகுதியில் இயங்கி வந்த காய்கறி மொத்த வியாபார மார்க்கெட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் தொடர்ந்து ஏராளமான விபத்துக்கள் நடந்தன. இதனால் ஊரின் எல்லைப் பகுதியில் தனியாக இட வசதி ஏற்படுத்தி அப்பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கபட்டது. ஆனால் ஒரு சில வியாபாரிகள் முழுமையாக மாற்றி அமைக்காமல் நகர்ப் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் செயல்படுத்தி வருகின்றனர். இதனால் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி காய்கறிகளை ஏற்றி இறக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. மேலும் காலை, மாலையில் பள்ளி வாகனங்கள் அப்பகுதியில் இருந்து கடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைந்துள்ளது. மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. போலீசாரை காய்கறி வியாபாரிகள் அவ்வப்போது நன்கு கவனித்து விடுவதால், நெரிசல் குறித்து போலீசாரும் கண்டு கொள்வதில்லை. விபத்து ஏற்படும்போது மட்டும் வலம் வரும் போலீசார், அனைத்து நாட்களிலும் நெரிசலை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி