மேலும் செய்திகள்
பகைவரைச் சாய்த்து பாரதம் காத்தோரே!
08-Dec-2024
தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்தறை சார்பில் முப்படை வீரர் கொடி நாள் விழா நடந்தது. இதில் முன்னாள் படைவீரர்கள் சார்ந்த 10 வாரிசுதாரர்களுக்கு ரூ.3.5 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இது தவிர ராணுவப் பணியின் போது போரில் இறந்த, ஊனமுற்ற, முன்னாள் படை வீரர்கள் சார்ந்தவர்கள் 26 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கலெக்டர் பேசுகையில், 'மாவட்டத்திற்கு படைவீரர் கொடிநாள் வசூலுக்காக ரூ.96.4 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால், ரூ.1.16 கோடி கொடிநாள் நிதி பெறப்பட்டுள்ளது. இந்தாண்டும் அரசு அலுவலர்கள், பொது மக்கள் கொடி நாள் நிதி வழங்கி ஒத்துழைக்க வேண்டும்.', என்றார். விழாவில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., தாட்சாயிணி, முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் கலைச்செல்வி, மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
08-Dec-2024