உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் தி.மு.க., அ.தி.மு.க., வேட்பாளர்கள் ஓட்டளிப்பு

தேனியில் தி.மு.க., அ.தி.மு.க., வேட்பாளர்கள் ஓட்டளிப்பு

தேனி: தேனி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ் செல்வன், அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி ஆகியோர் நேற்று ஓட்டளித்தனர்.தேனி லோக்சபா தொகுதி தி.மு.க வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் தனது சொந்த ஊரான கம்பம் அருகேயுள்ள நாராயணத்தேவன்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒட்டுச் சாவடி எண் 247 ல் தனது ஓட்டை காலை 7:25 மணிக்கு பதிவு செய்தார். ஓட்டளித்தபின் நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க. ஆட்சியின் நல்ல திட்டங்களால் நான் வெற்றி பெறுவது உறுதி. வெற்றி பெற்றால் திண்டுக்கல் சபரிமலை ரயில் திட்டம் குறைந்தபட்சம் கூடலூர் வரையாவது கொண்டு வர பாடுபடுவேன். உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி நகரங்களுக்கு பைபாஸ் ரோடு வசதி ஏற்படுத்த பாடுபடுவேன். முதல்வர் ஸ்டாலினிடம் கூறி டோல்கேட்டுகள் அகற்ற நடவடிக்கை எடுப்பேன் என்றார்.தேனி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி நேற்று தேனி பெரியகுளம் ரோட்டில் உள்ள பிரசன்டேஷன் கான்வென்ட் பள்ளியில் உள்ள 250வது ஓட்டுச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் காலை 8:10 மணிக்கு வந்து ஓட்டளித்தார். வேட்பாளரின் மனைவி ராணி, மகன் சூர்யகுமார் 32, மகள் டாக்டர் சுகன்யா 29 ஆகியோர் ஓட்டளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ