உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உதயநிதி பிரசார நேரம் முடிந்ததால் ஆண்டிபட்டியில் தி.மு.க.,வினர் ஏமாற்றம்

உதயநிதி பிரசார நேரம் முடிந்ததால் ஆண்டிபட்டியில் தி.மு.க.,வினர் ஏமாற்றம்

ஆண்டிபட்டி : தி.மு.க., வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி நேற்று இரவு 9:15 மணிக்கு ஆண்டிபட்டியில் பேசுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆண்டிபட்டி - தெப்பம்பட்டி ரோடு சந்திப்பு அருகே இரவு 8:00 மணியிலிருந்து தொண்டர்கள் காத்திருந்தனர். ஆனால் உசிலம்பட்டியில் பிரசாரத்தை முடித்தபின் இரவு 10:00 மணி வரை உதயநிதி வராததால் வெளியூர்களிலிருந்து வாகனங்களில் வந்து காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.இரவு 10:15 மணிக்கு திறந்த வேனில் கும்பிட்டபடி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுடன் வந்த உதயநிதிக்கு புத்தகங்கள், சால்வை கொடுத்து தொண்டர்கள் வரவேற்றனர். கும்பிட்டபடி இரவு 10.00 மணிக்கு மேல் பேசக்கூடாது என்று சைகையில் காட்டிய படியும் எதுவும் பேசாமல் பிரசார வேனில் இருந்தபடியே ஆண்டிபட்டியை கடந்து சென்றார்.ஆண்டிபட்டி அருகே ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த 'நெட்' என்பவர் ஆண்டிபட்டியில் ஓட்டலில் சாப்பிடுவதற்காக வந்திருந்தார். கூட்டத்தினரிடையே மாட்டிக்கொண்ட அவருக்கு தொண்டர்கள் தி.மு.க., சால்வை அணிவித்து, புத்தகம் வழங்கி தங்களுடன் சேர்ந்து கட்சி பாடலுக்கு ஆட வைத்தனர். இதனை பலரும் ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ