உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சொத்து ஆவண பட்டா புத்தகத்தை நகல் எடுத்து பயன்படுத்த வேண்டாம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆவண எழுத்தர்கள் கோரிக்கை

சொத்து ஆவண பட்டா புத்தகத்தை நகல் எடுத்து பயன்படுத்த வேண்டாம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆவண எழுத்தர்கள் கோரிக்கை

தேனி : சொத்து ஆவண பட்டா புத்தகத்தை நகல் எடுத்த பயன்படுத்த வேண்டாம் என்பதை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆவண எழுத்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.சொத்துக்களை வாங்க, விற்க பட்டா முக்கிய ஆவணமாக உள்ளது.இந்த ஆவணம் கடந்த 1935 முதல் 1965 வரை மஞ்சள் நிற புத்தகமாக அச்சடிக்கப்பட்டு, அதிலேயே சார்பதிவாளர் கையெப்பம் இட்டு, சொத்துப்பதிவு ஆவணங்கள் சான்றிதழ் இட்டு பதிவு ஆவணமாக பயன்படுத்தி வந்தனர். அதன்பின் 1996 முதல் 2000 வரை நீல நிற வண்ணத்தில் பட்டா புத்தகம் வழங்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தது.அதன் பின் 2001 முதல் தற்போது வரை மீண்டும் மஞ்சள் நிற புத்தகத்தை பயன்படுத்த பதிவுத்துறை உத்தரவிட்டது. தற்போது வரை மஞ்சள் நிற புத்தகமே சொத்தின் முக்கிய ஆவணமாக பயன்பாட்டில் உள்ளது. இந்த பட்டா புத்தகத்தில் 10 பக்கங்கள் உளளன.

விழிப்புணர்வு தேவை

ஆவண எழுத்தர்கள் கூறுகையில், பல்வேறு பணிகளுக்கு சொத்து ஆவணமான பட்டாக்களை பலரும் பயன்படுத்துகின்றனர்.ஆனால் அனைத்து தேவைகளுக்கும் பட்டாவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற புரிதலும், விழிப்பணர்வும் இல்லை. இதனால் பட்டா புத்தகத்தை பலர் நகல்களாக பயன்படுத்துகின்றனர். இதனை தவிர்த்து ஆன்லைனில் பதிவேற்ற ஏற்ற வகையில் பிற கணினி டிஜிட்டல் பைலாக மாற்றி பயன்படுத்த வேண்டும்.', என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை