மேலும் செய்திகள்
முல்லைப் பெரியாற்றில் குளித்த கல்லுாரி மாணவர் பலி
4 hour(s) ago
பள்ளி கலை விழா துவக்கம்
4 hour(s) ago
குரங்குகளுக்கு உணவு வழங்குவதை தடுக்க வலியுறுத்தல்
4 hour(s) ago
தாயுமானவர் திட்டத்தில் கூடுதலாக 8558 பேர் சேர்ப்பு
4 hour(s) ago
கம்பம்: மேகமலை, கம்பமெட்டு வனப்பகுதிகளில் வறட்சி துவங்கியுள்ளதால் குடிநீர் தேடி வன உயிரினங்கள் இடம் பெயர துவங்கியுள்ளன.கோடை வெயில் ஒரு மாதத்திற்கும் மேலாக கொளுத்த துவங்கியுள்ளது. இதுவரை எந்தாண்டும் இல்லாத அளவிற்கு வெயில் கொளுத்துகிறது. கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம். நகர் பகுதிகள் மட்டுமல்லாமல் வனப்பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். தற்போது வனப்பகுதிகளில் வழக்கம் போல தீப் பிடிக்கும் நிகழ்வுகளும் அதிகரித்துள்ளது.ஏற்கெனவே கொளுத்தும் வெயிலுடன், தீ வைப்பதால் ஏற்படும் வெப்பமும் வன உயிரினங்களுக்கு ஒத்துவராது. மேலும் கடும் வறட்சி நிலவ துவங்கி உள்ளது. குறிப்பாக மேகமலை, வெண்ணியாறு, இரவங்கலாறு, சுருளி, வண்ணாத்திபாறை, கம்பமெட்டு, ராமக்கல் மெட்டு, வெள்ளிமலை, சதுரங்காபாறை உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வன உயிரினங்கள் யானைகள், சிறுத்தை, நரி, காட்டுப்பன்றிகள், மான்கள், கேளையாடுகள், காட்டுமாடுகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் குடிநீருக்கென இடம்பெயர துவங்கி உள்ளன. சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, கம்பம் மணிகட்டி ஆலமரம், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களின் மலையடிவாரங்களில் உலா வருகிறது. இவை தோட்டங்களில் பம்ப் செட் தொட்டிகளில் உள்ள நீரை குடித்து செல்கின்றன. கம்பமெட்டு மலைப் பாதையில் குரங்கு கூட்டம் தண்ணீர் தேடி அலைகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கம்பமெட்டு மலைப் பாதையில் தண்ணீர் ஆங்காங்கே வைப்பார்கள். அதே போல வனப்பகுதிகளிலும் குறிப்பிட்ட சில இடங்களில் தொட்டிகளில் நீரை நிரப்பி வைப்பார்கள். ஆனால் இந்தாண்டு வனத்துறையினர் அந்த பணியை மேற்கொள்ளவில்லை.பல இடங்களில் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வன உயிரினங்கள் கிராமங்களுக்குள் நுழையும் அபாயம் எழுந்துள்ளது.யானைகள், புலிகள் போன்ற பெரிய உயிரினங்கள் தேக்கடி நீர்தேக்கத்தை நோக்கி சென்று விடுகிறது. இந்த வறட்சி இன்னமும் சில மாதங்கள் நீடிக்கும் என்பதால், மலையடிவாரங்களில் வனஉயிரினங்கள், மனிதர்கள் மோதல் நடைபெறவும் வாய்ப்புள்ளது. எனவே வனப்பகுதிகளில் ஏற்கெனவே வனத்துறையினர் ஏற்படுத்தியுள்ள தொட்டிகளில் தண்ணீரை நிரப்ப வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago