மேலும் செய்திகள்
விநாயகர் சதுர்த்தி ஊர்வல ஆலோசனை கூட்டம்
11-Aug-2024
தேனி : 'விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஜாதி, மத உணர்வுகளை புண்படுத்தும் விதமான நடவடிக்கைகள் இருக்கக் கூடாது.' என, ஆலோசனைக் கூட்டத்தில் டி.எஸ்.பி., பார்த்திபன் வலியுறுத்தினார்.தேனியில் விநாயாகர் சதுர்த்தி விழா, ஊர்வலம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்து. தேனி டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், இளவரசன், சஜூகுமார் முன்னிலை வகித்தனர்.ஹிந்து முன்னணி, ஹிந்து எழுச்சி முன்னணி, பிற ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். டி.எஸ்.பி., பேசுகையில், 'விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்களில் கூரை இரும்பு சீட் கொண்டு அமைக்க வேண்டும். அவ்விடத்திற்கு மின்வாரிய அனுமதி பெற வேண்டும். ஊர்வலத்தில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. அதே போல் ஜாதி, மத உணர்வுகள் புண்படும் வகையில் பாடல்கள், கொடிகள் பயன்படுத்த கூடாது.', என்றார். ஹிந்து அமைப்புக்களை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
11-Aug-2024