உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முதியோர், மாற்றுத்திறனாளிகள் நாளை தபால் ஓட்டுசெலுத்த ஏற்பாடு

முதியோர், மாற்றுத்திறனாளிகள் நாளை தபால் ஓட்டுசெலுத்த ஏற்பாடு

தேனி : லோக்சபா தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர், மாற்றத்திறனாளிகள் வீட்டில் இருந்து ஓட்டளிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. தேனி தொகுதியில் முதியோர் 11,808 பேர், மாற்றுத்திறனாளிகள் 10,067 பேர் என மொத்தம் 21,875 பேருக்கு தபால் ஓட்டளிப்பதற்கான 12டி படிவம் வழங்கப்பட்டது. இதனை மார்ச் 25க்குள் பூர்த்தி செய்து வழங்க கோரினர். வீட்டில் இருந்தே ஓட்டளிக்க முதியோர் 618 பேர், மாற்றுத்திறனாளிகள் 616 பேர் எனு 1234 பேர் படிவத்தை பூர்த்தி செய்து பி.எல்.ஓ.,க்களிடம் அளித்தனர். இவர்களிடமிருந்து ஓட்டுக்கள் பெறும் பணி (ஏப்.,6ல்) நாளை நடக்கிறது. விடுபட்டவர்கள் ஏப்., 9ல் ஓட்டளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ