உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேவிகுளம் ஊராட்சி தலைவர் தேர்வு

தேவிகுளம் ஊராட்சி தலைவர் தேர்வு

மூணாறு : தேவிகுளம் ஊராட்சியில் உள்ள 18 வார்டுகளில் இடதுசாரி கூட்டணி 12, காங்கிரஸ் 6 உறுப்பினர்கள் உள்ளனர். இடது சாரி கூட்டணி வசம் உள்ள ஊராட்சியில் இந்திய கம்யூ., சேர்ந்த 13ம் வார்டு உறுப்பினர் சுபா தலைவராக பொறுப்பு வகித்தார். அவர், கூட்டணியின் ஒப்பந்தபடி இரு வாரங்களுக்கு முன்பு தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார்.அதனால் தலைவர் பொறுப்புக்கு நேற்று ஓட்டெடுப்பு தேர்தல் அதிகாரியான தேவிகுளம் தாலுகா வழங்கல் துறை அதிகாரி சஞ்சய்நாத் தலைமையில் நடந்தது.இடது சாரி கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூ., சேர்ந்த 12ம் வார்டு உறுப்பினர் மின்ஸிராபின்சன், காங்கிரஸ் கூட்டணி சார்பில் 7ம் வார்டு உறுப்பினர் ஜான்சி ஆகியோர் போட்டியிட்டனர்.அதில் மின்ஸி ராபின்சன் 12, ஜான்சி 5 ஓட்டுகள் பெற்றனர். மின்ஸிராபின்சன் தலைவராக தேர்வானார். ஒன்றாம் வார்டு காங்., உறுப்பினர் முருகன் ஓட்டு நிராகரிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி