உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுருளி அருவியில் யானைகள் முகாம்: பயணிகள் குளிக்க தடை

சுருளி அருவியில் யானைகள் முகாம்: பயணிகள் குளிக்க தடை

கம்பம் : சுருளி அருவி அருகே ஒரு வார இடைவெளியில் மீண்டும் யானைகள் கூட்டம் தென்பட்டதால், சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.சுருளி அருவியில் குளிக்க தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேகமலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை வனத்துறையினர் அருவி பகுதிக்கு சென்ற போது, வெண்ணியாறு ஓடை பகுதியில் குட்டிகளுடன் இரண்டிற்கும் மேற்பட்ட யானைகள் நின்றுள்ளது. யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு வனத்துறையினர் ரோட்டிற்கு திரும்பினர். கடந்த ஜூலை முதல் தேதியில் இதே போல யானைகள் கூட்டம் முகாமிட்டதால் அருவியில் குளிக்க தடை விதித்தனர்.இது தொடர்பாக கம்பம் கிழக்கு ரேஞ்சர் பிச்சை மணி கூறுகையில், யானைகள் வெண்ணி யாறு ஓடை அருகில் முகாமிட்டுள்ளது. வனப்பகுதிக்குள் நகர்ந்து சென்றால் குளிக்க அனுமதி வழங்கப்படும். இரண்டு வனக் குழுக்கள் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க நியமித்துள்ளோம் என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்