| ADDED : மே 30, 2024 04:01 AM
தேனி: திண்டுக்கல் வடமலையான மருத்துவமனையில் அதிநவீன எண்டோஸ்கோப்பி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (EUS- Enodoscopic Ultra Sound) வசதி உள்ளது.எண்டோஸ்கோப்பி இரைப்பை, குடல் பகுதியில் உள்ள திசுக்களின் நோய்களை கண்டறிய பயன்படுகிறது. எண்டோஸ்கோப்பி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் குடலின் தோல்பகுதி, வெளிப்புற திசுக்களின் நிலையை கண்டறியலாம். மேலும் உயர் அதிர்வெண் ஒலி அலைகள் மூலம் செரிமான பாதை, நுரையீரல், கணையம், பித்தப்பை, கல்லீரல், நிணநீர் கட்டிகள் அதனை சுற்றி உள்ள திசுக்களின் நிலையை துல்லியமாக கண்டறியலாம். கணைய, நுரையீரல் புற்றுநோயை வகைப்படுத்த பயன்படுகிறது. எண்டோஸ்கோப்பி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் புற்றுநோய் கட்டிகள், அதன் அளவு, அது பரவுதலை கண்டறிய பயன்படுகிறது. இந்த தொழில் நுட்பத்தின் மூலம் கணையத்தில் உள்ள திரவம், திசுக்கள் சேகரிப்பு, நீர்கட்டிகளில் இருந்து திரவங்களை அகற்றவும், சிகிச்சை அளிக்கவும் பயன்படுகிறது.மேலும் வாஸ்குலார் சிகிச்சையிலும் பயன்படுகிறது. முக்கியமான கணைய புற்றுநோய் வலிக்கு சிகிச்சை அளிப்பதிலும், நாள்பட்ட கணைய அழற்சியின் விளைவாக ஏற்படும் வலியை போக்குவதற்கும் உதவுகிறது. எண்டோஸ்கோப்பி அல்ட்ரா சவுண்ட் மூலம் செலியாக் பிளெக்ஸஸில் பீனால், எத்தனால் போன்ற ஆல்கஹால் செலுத்தப்படுவதால் மூளை, முதுகெலும்பிற்கு வலிகைள கடத்தும் நரம்புகள் அழிக்கப்படுகின்றன. இதனால் வலி நிவாரண சிகிச்சையில் மற்ற கருவிகளை விட எண்டோஸ்கோப்பி அல்ட்ரா சவுண்ட் பெரிதும் உதவுகின்றது. இதில் கதிர்வீச்சு அபாயம் இல்லை. வெளிநோயாளிகள் பிரிவில் இப்பரிசோதனை செய்யப்படுகிறது.