மேலும் செய்திகள்
கல்லுாரியில் விளையாட்டு விழா
26-Feb-2025
தேனி : தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவிற்கு தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள்சாமி தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். கல்லுாரி இணைச்செயலாளர் விஜயன், பொருளாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் சீனிவாசராகவன் வரவேற்றார். ஐ.சி.டி., அகாடமி துணைத் தலைவர் சரவணன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அவர் பேசியதாவது: மாணவர்கள் வாழ்வில் யோசித்து செயல்படும் பழக்கத்தையும், நன்றி சொல்லும் மனப்பாண்மை, தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்., என்றார். அண்ணா பல்கலை தரவரிசை பட்டியலில் மாநில அளவில் 14ம் இடம் பிடித்த கணினிப்பொறியியல் துறை மாணவி ரம்யாவிற்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து பொறியியல் பட்டம் முடித்த நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் விழாவை ஒருங்கிணைத்திருந்தனர்.
26-Feb-2025