உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கம்பம் நகராட்சி பகுதியில் குப்பை அகற்றும் பணி சுணக்கம்

கம்பம் நகராட்சி பகுதியில் குப்பை அகற்றும் பணி சுணக்கம்

கம்பம், : கம்பம் நகராட்சியில் குப்பை அகற்றும் பணியில் நிலவும் சுணக்கம் போக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.குப்பை கையாள்வது வருங்காலங்களில் சவாலாக இருக்கும் என்பதால், திடக்கழிவு மேலாண்மை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வீடுகளில் இருந்து மக்கும்,மக்காத குப்பை என பிரித்து வாங்கப்படுகிறது. கம்பம் நகராட்சியில் போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாததால், குப்பை சேகரம் ஒப்பந்த அடிப்படையில் தனியார் மயமாக்கப்பட்டது. ஒப்பந்தம் பெற்றவர் ஒப்பந்தந்தில் கூறியபடி தினமும் உரிய நபர்களை பணியில் ஈடுபடுத்துவது இல்லை. பணியாளர்கள் குறைவாக வருகின்றனர். குப்பை சேகரத்தில் சுணக்கம் நிலவுகிறது. இதனால் நகரில் வீதிகளில் குப்பை தேங்கி உள்ளது.நகராட்சி கமிஷனர் இதில் கவனம் செலுத்தாமல் உள்ளனர். காண்ட்ராக்ட் எடுத்தவரிடம் பேசி, குப்பைகளை தினமும் சேகரம் செய்ய வலியுறுத்த வேண்டும். குப்பை கிடங்கை பூட்டி வைப்பது போன்ற நடவடிக்கைகள் கூடாது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை