மேலும் செய்திகள்
துணை மண்டல தளபதி பதவிக்கு அழைப்பு
21-Aug-2024
தேனி : போலீஸ் கேன்டீனில் இனி ஊர்க்காவல் படையினரும் சலுகை விலையில் பொருட்கள் வாங்கும் வசதியை எஸ்.பி., சிவபிரசாத் துவக்கி வைத்தார்.போலீசார் சலுகை விலையில் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க காவலர் பல்பொருட்கள் அங்காடி இயங்கி வருகின்றன.ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், போலீசார் சலுகை விலையில் பொருட்களை வாங்குகின்றனர். ஊர்க்காவல் படையினருக்கு சலுகை விலையில் பொருட்கள் வழங்க வேண்டும் என டி.ஜி.பி., வன்னியபெருமாளிடம் கோரிக்கை வைத்தனர்.அவரது உத்தரவில் நேற்று தேனி போலீஸ் கேன்டீனில் பயனாளிக்கு பொருட்களை பெறும் அனுமதி சான்றிதழை எஸ்.பி., சிவபிரசாத் வழங்கினார். நிகழ்ச்சியில் ஊர்க்காவல்படை திண்டுக்கல் சரக உதவி தளபதி அஜய்கார்த்திக்ராஜா, வட்டார தளபதி செந்தில்குமார், துணை வட்டார தளபதி நிவேதா, எஸ்.ஐ., ஜாஹிர்உசேன், எழுத்தர் பிரபாகரன், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், கேன்டீன் அதிகாரிகள் உடனிருந்தனர்.
21-Aug-2024