உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மின் கசிவால் தீப்பற்றி வீடு சேதம் பராமரிப்பு செய்யாததால் தொடரும் சோகம்

மின் கசிவால் தீப்பற்றி வீடு சேதம் பராமரிப்பு செய்யாததால் தொடரும் சோகம்

மூணாறு : மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான நயமக்காடு எஸ்டேட் வெஸ்ட் டிவிடினில் ஏற்பட்ட தீவிபத்தில் தொழிலாளி வெங்கடேஷ் வீடு எரிந்து சேதமானது.அவரது வீட்டில் நேற்று பகல் 11:00 மணிக்கு தீப்பற்றி பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. வீட்டின் அருகே தேயிலைத் தோட்டத்தில் பணி செய்த தொழிலாளர்கள் அருகில் உள்ள வீடுகளுக்கு பரவ விடாமல் தடுத்து தீயை தக்க சமயத்தில் அணைத்ததால் பெரும் பொருள் சேதம் உள்பட அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. மின்கசிவு மூலம் தீப்பற்றியதாக தெரியவந்தது.

தொடரும் தீவிபத்துகள்

மூணாறைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளுக்கு தனியார் தேயிலை கம்பெனி நிர்வாகம் சார்பில் மின் வினியோகமும், பராமரிப்பும் நடக்கிறது. தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கி 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதன்பிறகு இதுவரையிலும் பராமரிப்பு பணிகள் எதுவும் செய்யவில்லை. அதனால் மின்கசிவு மூலம் அடிக்கடி தீவிபத்துகள் ஏற்பட்டு வருகிறது.இதேகம்பெனிக்குச் சொந்தமான கடலார் எஸ்டேட் வெஸ்ட் டிவிஷனில் ஜன.12ல் இரவில் ஏற்பட்ட தீவிபத்தில் எட்டு வீடுகளும், பெரியவாரை எஸ்டேட் சோலமலை டிவிஷனில் பிப்.8ல் இரவில் தீப்பற்றி ஏழு வீடுகளும் தீக்கிரையாகின. அவை மின்கசிவு மூலம் ஏற்பட்டதாக தெரியவந்தது. இருப்பினும் மின்வயர்களை பராமரிக்க கம்பெனி நிர்வாகம் தயாராகாததால் மின்கசிவு மூலம் தீ விபத்துகள் தொடர வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை