உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது

போடி: போடி அருகே சிலமலை புதுக் காலனியில் வசிப்பவர் திலீப்குமார் 24. இவரது மனைவி சந்தியா 19. இருவருக்கும் திருமணமாகி ஓராண்டு ஆகிறது. மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு திலீப் குமார் சந்தியாவை தகாத வார்த்தையால் பேசியுள்ளார். இந்நிலையில் நேற்று சந்தியா தனது உறவினர்களிடம் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். இதனை திலீப்குமார் சந்தேகப்பட்டு சந்தியாவை தகாத வார்த்தையால் பேசியும், சுத்தியலால் அடித்து காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். போடி தாலுாகா போலீசார் திலீப் குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி