உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் சன் பேக் ஷோரூம் திறப்பு விழா

தேனியில் சன் பேக் ஷோரூம் திறப்பு விழா

தேனி: தேனி சன் பேக் ஷோரூம் பள்ளி மாணவர்களுக்கு தேவையான பொருட்கள் உள்ள 3வது பெரிய ஷோரூமை தி.மு.க., தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கதமிழ்செல்வன் திறந்து வைத்தார். கே.எம்.சி., குழும நிர்வாக இயக்குனர் முத்துக்கோவிந்தன், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜ்மோகன், பொறியாளர் ராதாகிருஷ்ணன், தேனி பிளைவுட்ஸ் ராஜசேகரன் - ஹேமலதா குத்துவிளக்கு ஏற்றினர்.தேனி நகராட்சித் தலைவர் ரேணுப்பிரியா, துணைத் தலைவர் செல்வம், கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், பாலமுருகன், பாலமுத்தழகு குழும நிறுவனர் ஜெகநாத்மிஸ்ரா, 24 மனை தெலுங்குபட்டி செட்டி உறவின்முறை கவுரவத் தலைவர் கனகராஜ், தேசிய செட்டியார் பேரவை தேனி மாவட்டத் தலைவர் சுந்தரவடிவேல், எஸ்.எஸ். டூரிஸ்ட் ஹோம் வழக்கறிஞர் செல்வக்குமார், நுாதனா டிரேடர்ஸ் விஜயகுமார், தி.மு.க., வார்டு செயலாளர் பவுன்ராஜ், ஆனந்தம் ஜூவல்லரி சிவக்குமார், ஈஷா ஹால்மார் மையத்தின் நிர்வாகி அஜித், ஜே.பி.ஆர்., அக்வா ஜெயப்பிரகாஷ், விஜயா எலக்ட்ரிக்கல்ஸ் பாலாஜி, ராஜேஷ் கண்ணா, ஜீவரேகா டெக்ஸ் பரத்குமார், ஸ்ரீதேவி எலக்ட்ரிக்கல்ஸ் புண்ணியசெல்வம், செல்வம் பிரதர்ஸ் ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை உரிமையாளர்கள் ராஜ்குமார் - காந்திமலர், மகேந்திரன் - சங்கீதப்பிரியா, செந்தில்குமார் - பிரவீனா குடும்பத்தினர் செய்திருந்தனர். இந்நிறுவனம் தேனியில் 23 ஆண்டுகளாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ