உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்டத்தில் 87 உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் அதிகாரிகள் தகவல்

மாவட்டத்தில் 87 உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் அதிகாரிகள் தகவல்

தேனி: 'மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் செயல்படும் 87 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மேலும் 7 ஆயிரம் பள்ளி மாணவர்கள் பயனடைவர்.' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் மாநில அரசின் சார்பில் அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.இத்திட்டம் மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் கடந்தாண்டு ஊரக பகுதிகளில் இயங்கும் 310 பள்ளிகள், நகர் பகுதிகளில் இயங்கும் 52 பள்ளிகள் என 362 அரசுப் பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 22 ஆயிரம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.இந்தாண்டு ஊரக பகுதிகளில் செயல்படும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 7 ஆயிரம் மாணவர்கள் வரை பயனடைவர். உணவு வழங்க மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்