உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இடுக்கியில் வீட்டில் இருந்தபடி ஓட்டளிக்கும் பணி துவக்கம்

இடுக்கியில் வீட்டில் இருந்தபடி ஓட்டளிக்கும் பணி துவக்கம்

மூணாறு, : இடுக்கி லோக்சபா தொகுதியில் மாற்றுத்திறனாளி, 85 வயதை கடந்த முதியோர் வீடுகளில் இருந்தபடி ஓட்டளிக்கும் பணி துவங்கியது.தற்போது நடக்கும் லோக்சபா தேர்தலில் மாற்றுத் திறனாளிகள், 85 வயதை கடந்த முதியவர்கள் ஆகியோர் வீட்டில் இருந்தபடி ஓட்டளிக்கும் வசதியை தேர்தல் கமிஷன் செய்துள்ளது. அவ்வாறு ஓட்டளிக்க விரும்புவோர் 12டி எனும் படிவத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். அதற்கு தேர்தல் நடக்கும் நாளை பொறுத்து கால அவகாசம் வழங்கப்பட்டது.இடுக்கி லோக்சபா தொகுதியில் ஏப்.26 ல் தேர்தல் நடக்கிறது. தொகுதியில் 85 வயதை கடந்தவர்கள் 12,797, மாற்றுத் திறனாளிகள் 10,041 என 22,838 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வீட்டில் இருந்தபடி ஓட்டளிப்பதற்கான 12டி படிவம் ஏப்.2 வரை பெறப்பட்டது. 7852 பேர் விண்ணப்பித்தனர். அவர்கள் ஓட்டு பதிவு செய்யும் பணி நேற்று முன்தினம் துவங்கி ஏப்.19ல் நிறைவு பெறுகிறது. அப்பணியில் தொகுதி முழுவதும் நூறு குழுக்கள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் ஓட்டு சாவடி நிலை அலுவலர்கள் இருவர், கண்காணிப்பாளர், போலீசார் ஒருவர், வீடியோகிராபர், ஓட்டு பதிவின் வெளிப்படை தன்மையை உறுதி படுத்தும் வகையில் வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் இடம் பெறுகின்றனர்.முதல் கட்டத்தில் ஓட்டளிக்க தவறியவர்களுக்கு ஏப்.20 முதல் ஏப்.24 வரை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரியான மாவட்ட கலெக்டர் ஷீபாஜார்ஜ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ