உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு

தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு

தேனி, : பிரதமர் காப்பீட்டு திட்டத்தில் வாழை, கத்தரி, வெங்காயம், தக்காளி உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்ய தோட்டக்கலைத்துறையினர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.மாவட்டத்தில் வாழை, கத்தரி, வெங்காயம், தக்காளி, மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகள் பிரதமர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்யலாம். அறுவடை முடிந்து 14 நாட்களுக்குள் இழப்பீடு வழங்கப்படும். வாழை ஏக்கருக்கு காப்பீட்டுத்தொகை ரூ.68,600 பெற பிரிமியம் ரூ.3430ம், மரவள்ளி ஏக்கருக்கு காப்பீட்டு தொகை ரூ. 23,850, பிரிமியம் ரூ. 1205யை செப்.,16க்குள் செலுத்த வேண்டும்.வெங்காயத்திற்கு காப்பீட்டு ரூ. 40,750 பிரிமியம் ரூ.2037.50, கத்தரிக்கு காப்பீட்டுத்தொகை ரூ. 24100, பிரிமியம் ரூ.1205, தக்காளிக்கு காப்பீட்டுத்தொகை ரூ. 18,550, பிரிமியம் ரூ.927.50 யை ஆக.,31க்குள் செலுத்த வேண்டும். விண்ணப்பத்துடன், பதிவு கட்டணம், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்,தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், பொது சோவை மையங்களில் பயிர்காப்பீடு செய்து பயன்பெறலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் பிரபா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்