உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓட்டுச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தும் பணி தீவிரம்

ஓட்டுச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தும் பணி தீவிரம்

தேனி : லோக்சபா தேர்தலில் ஓட்டுச்சாவடிகளை கண்காணிக்க வெப்கேமரா பொருத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தல் ஏப்.,19ல் நடக்கிறது. தேனி லோக்சபா தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தேனி தொகுதியில் 1788 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஓட்டுச்சாவடிகளை நேரடியாக கண்காணிக்க கேமரா பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேனி தொகுதியில் 1276 ஓட்டுச்சாவடிகளில் ' வெப்கேமரா' பொருத்தப்படுகிறது. இந்த கேமராக்கள் இணையவசதி, வீடியோ பதிவு செய்யும் வசதி உள்ளன. பொருத்துவதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் டெக்னிசியன்களுக்கு கடந்த வாரம் பயிற்சி வழங்கப்பட்டது. மேராக்கள் பொருத்தும் பணி இன்று முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் மட்டும் 1225 ஓட்டுச்சாவடிகள் 'வெப்கேமரா' பொருத்தப்பட உள்ளது.இந்த கேமராக்கள் மூலம் சம்மந்தப்பட்ட ஓட்டுச்சாவடியை நேரடியாக கலெக்டர் அலுவலகம், சென்னை தலைமை தேர்தல் அலுவலகத்தில் இருந்து நிகழ்வதை கண்காணிக்க இயலும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி