தேனி : சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்ட தேனி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.தேனி பங்களா மேட்டில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர். எஸ்.பி., சிவபிரசாத், கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், டி.எஸ்.பி., பார்த்திபன், மதுவிலக்கு டி.எஸ்.பி., ரவிசக்கரவர்த்தி, இன்ஸ்பெக்டர் உதயகுமார் பங்கேற்றனர். ஆட்டோ, டூவீலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் துவங்கி வைத்தார். ஊர்வலம் நேருசிலை, அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி வழியாக சென்று மீண்டும் இதே மார்க்கத்தில் சென்று பழனிசெட்டிபட்டியில் நிறைவடைந்தது. மாலையில் பள்ளிமாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.தேனி கம்மவார் சங்கம் கலைக் கல்லுாரியில் நடந்த போதை விழிப்புணர்வு கருத்தரங்ககிற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் தாமோதரன் வரவேற்றார். எஸ்.பி., சிவபிரசாத் பேசுகையில், மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் வினியோகிப்பவர்கள் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். என்றார். தேனி மருத்துவக்கல்லுாரி உளவியல் துறை தலைவர் டாக்டர் முகமது ஷபி, டி.எஸ்.பி., பார்த்தபன் பேசினர். கல்லுாரி பொருளாளர் வாசுதேவன், கல்லுாரி முதல்வர் சீனிவாசன், கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.வடபுதுப்பட்டி இந்து மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு பேச்சுப் போட்டி அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் பள்ளி செயலாளர் ராஜேஸ்வரன் முன்னிலையில் நடந்தது. தலைமை ஆசிரியர் வாசு வரவேற்றார். பேச்சுப் போட்டியில் மாணவர்ன் பேசினர். மாணவர்களுக்கு போலீசார் பரிசுகள் வழங்கி பாராட்டினர். கட்டுரைப் போட்டி
தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கட்டுரை போட்டி அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் கண்மணி தலைமையில் நடந்தது. எஸ்.ஐ., பாண்டியம்மாள், பயிற்சி எஸ்.ஐ., வாசுகி, சிறப்பு எஸ்.ஐ., அய்யனார் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் கலையரசிஞானதீபம் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர்கள் ஐவண்ணன், மீனா, ஆசிரியர் சிவசெந்தில்குமார் பங்கேற்றனர். கட்டுரை போட்டியில் முதல்பரிசு பெற்ற மாணவி ஓவியா, இரண்டாம் பரிசு ஏனோசாரேச்சல், மூன்றாம் பரிசு தீபிகாஸ்ரீக்கு இன்ஸ்பெக்டர் பரிசு வழங்கினார்.இப் பள்ளியில் தேனி மதுவிலக்கு அமலாக்கத்துறை சார்பில், போதை ஒழிப்புதின உறுதி மொழி எடுக்கப்பட்டது. எஸ்.ஐ., பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். உறுதி மொழியை எஸ்.ஐ., பன்னீர்செல்வம் வாசிக்க மாணவர்கள் உறுதி மொழி எடுத்தனர். ஆசிரியர் சிவசெந்தில்குமார் நன்றி தெரிவித்தார்.முத்துத்தேவன்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடர் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பழனிசெட்டிபட்டி இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாணவர்கள், பேராசிரியர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். உறவின்முறைத் தலைவர் ராஜமோகன், துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், பள்ளி செயலாளர் பாலசரவணக்குமார், இணைச்செயலாளர்கள் வன்னியராஜன், அருண்குமார், பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.ஆண்டிபட்டி: அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை ஆண்டிபட்டி டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் ரங்கராஜன் உதவி தலைமை ஆசிரியை சுமித்ராதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆண்டிபட்டியில் மெயின் ரோடு வழியாக சக்கம்பட்டி வரை சென்று மீண்டும் பள்ளியில் ஊர்வலம் முடிந்தது. ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போதை விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கான கட்டுரை, ஓவிய போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கம்பம்: காமயகவுண்டன்பட்டி கஸ்தூரிபாய் நடுநிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் முருகேசன் தலைமை வகித்தார். சித்தா டாக்டர் சிராசுதீன், போதைப் பொருள்களான மது, கஞ்சா, வலி நிவாரண மாத்திரைகள், போதை மாத்திரைகள் பயன்படுத்தவதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் , மனநல பாதிப்புகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. டாக்டர் முருகானந்தம், மருந்தாளுனர் பசும்பொன், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.போடி: டவுன் போலீசார் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் டி.எஸ்.பி., பெரியசாமி தலைமையில் நடந்தது. நகராட்சி கமிஷனர் ராஜலட்சுமி, டவுன் இன்ஸ்பெக்டர் ராஜபுஷ்பா முன்னிலை வகித்தனர். ஜ.கா.நி., மேல்நிலைப் பள்ளி, நகராட்சி உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு போதை பொருட்களுக்கு எதிரான பதாகைகள் ஏந்திய படி ஊர்வலமாக சென்றனர்.